ரம்யா கிருஷ்ணன், சமந்தா, அஞ்சலி உள்பட பல பிரபல கதாநாயகிகளும் வெப்சீரிஸில் நடிக்கத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், நடிகை ஹன்சிகாவும் தற்போது ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார். அனுஷ்கா நடித்த பாகமதி படத்தை இயக்கிய ஜி.அசோக் இயக்கும் பெயரிடப்படாத வெப்சிரீஸில் நடிக்கிறார்.
இந்த தொடரின் படப்பிடிப்பு தான் கலந்து கொண்டு வருவதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார். மஹா, பார்ட்னர் மற்றும் கல்யாண் இயக்கும் படம் என தமிழில் மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஹன்சிகா.

