பொங்கலுக்கு நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் திரைக்கு வருமா வராதா என்ற குழப்பம் நீண்டநாட்களாகவே நிலவி வந்தது. பின்னர் நிச்சயமாக படம் பொங்கலுக்கு வரும் என்று சொல்லப்பட்டது.
அதன் பிறகும் இதே குழப்பம் நிலவி வந்தாலும், விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி இருக்கும் ராஜேஷ், பொங்கல் அன்று விஸ்வாசம் படத்தை திரையிட்டு ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இப்போதே படத்தின் விளம்பரத்தை தொடங்கிவிட்டார்.
சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் கார் பார்க்கிங்கில் 20 அடி உயரமும் 120 அடி அகலம் கொண்ட பிரமாண்டமான பேனரை வைத்திருக்கிறார். இதன் மூலம் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு உறுதியாக ரிலீஸ் ஆகும் என்பதை ராஜேஷ் உணர்த்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க விஸ்வாசம் படத்தின் ரிலீசை எப்படியாவது தள்ளிவைக்க வேண்டும் என்று முயற்சியும் ஒருபக்கம் நடைபெற்று வருவதாக திரையுலகில் பேச்சு அடிபடுகிறது. அதாவது பேட்ட படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு மறைமுக முயற்சி நடப்பதாக திரையுலகில் பேச்சு நிலவுகிறது.

