தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சரியாகத் தயாரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவில்லை என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் காரணமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒன்றாக இருந்த விஷால், ஐசரி கணேஷ் ஆகியோருக்கு இடையே எதனால் பிரிவு வந்தது என சிலர் யோசித்தனர்.
நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி நடிக்க பிரபுதேவா இயக்கத்தில் ஐசரிகணேஷ் தயாரிப்பில் விஷால், கார்த்தி, சாயிஷா நடிக்க ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படம் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சில நாட்கள் படப்பிடிப்புன் அந்தப் படம் நின்று போனது. பிரபுதேவா சரியான முறையில் கதையைத் தயார் செய்யவில்லை என அப்போது காரணம் வெளிவந்தது.
அதே சமயம், சமீபத்தில் பேசிய ஐசரி கணேஷ், அந்தப் படத்தில் விஷால் தொடர்ந்து நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். அவர்களது பிரிவுக்கு அந்தப் படம் தான் காரணமா என்பதை விஷால் தெளிவுபடுத்தினால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.

