சரத்குமார் மற்றும் ஜோதிகா நடித்த `பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்.
மேலும் தொடர்ந்து கார்த்திக்குன் `அலெக்ஸ் பாண்டியன்’, `பையா’ படங்களிலும் நடித்தார்.
தற்போது இவருக்கு 52 வயதாகிறது.
இந்நிலையில் இவர் அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணை மணந்தார்.
கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் இவர்களது திருமணம் நடந்தது.
முன்னதாக மிலிந்த் பிரஞ்சு நடிகை மைலன் ஜம்பனோயை திருமணம் செய்து கடந்த 2009-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணம் நடிகர் கூறியதாவது… “மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணமா என்கிறார்கள்.எனக்கு மற்றவர்கள் பேசுவது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் எங்கள் காதலைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது” என்றார்