ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், ‘3டி’ ஓவியங்கள் வரைவதில், உலகப்புகழ் பெற்றவர்; சிலிகான் சிலைகளை செய்யும் உலகின் இரு நபர்களில் ஒருவர்.
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தை உருவாக்கியவரும் இவர் தான். ஆந்திரா மெஸ் படத்தில் வில்லனாக அறிமுகமான இவர், ஜடா படத்திலும் நடித்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீதர் கூறுகையில், ”இயல்பாக நடிக்கவே விரும்புகிறேன். வார்த்தைகளை விட, உணர்வுகளை வெளிப்படுத்துவதே சிறந்தது என நினைக்கிறேன்,” என்றார்.

