நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தனு தானம் செய்ய வேண்டும் என, தொலைக்காட்சி தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛வார்’. இப்படத்தை தொலைக்காட்சி தொகுப்பாளரான பாவனா பாலகிருஷ்ணன் பார்த்திருக்கிறார். அந்தப் படம் அவருக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. படத்தையும், ஹிருத்திக்கையும் பாராட்டி, பாவனா டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், ‛‛வார் படத்தில் ஆக்ஷன், த்ரில்லர், ஹாலிவுட் பாணி சண்டைக் காட்சிகள், காதல், பைக் ரேஸ் எல்லாமே இருக்கின்றன. இதெல்லாம், அந்தப் படம் ஆண்களைக் கவருவதற்கான காரணிகளாக இருக்கலாம். படம் பெண்களையும் ஈர்த்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோரின் நடிப்பு தான். இருவரும் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்கின்றனர். ஹிருத்திக் ரோஷன், இதுபோன்று மேலும் பல படங்களை பண்ண வேண்டும். அதோடு அவர் விந்தனு தானம் செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
பாவனாவின் இந்த பதிவிற்கு பாசிட்டிவ்வாகவும்; நெகட்டிவ்வாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

