விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் அவரின் அடுத்தபடத்தை பற்றிய தகவல் தொடந்து வெளியாகி வருகிறது.
விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ல் படத்திலிருந்து ஸ்பெஷலை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளையில் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் விஜய் 64 படத்தின் இயக்குனர் என சொல்லப்படுகிறது.
விஜய்யிடம் கதை சொல்லி கால்ஷீட் கிடைக்காதா என காத்திருக்கும் இயக்குனர்களும் உண்டு. அப்படி இருக்கையில் லோகேஷ் தான் கார்த்தியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள கைதி படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்களை காட்டி தான் விஜய்யை கவர்ந்தாராம்.
இக்கதை அவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.