சினிமா ஸ்ட்ரைக் முடிந்து தமிழ் சினிமாவில் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் தயாராகி இதுவரை வெளியாகாமல் இருந்த நிறைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் விஜய்யின் 62வது படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். முருகதாஸ் இயக்கும் விஜய்யின் 62வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்டது.
அடுத்ததாக படக்குழு ஜுன் மாதம் வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம். ஆனால் எந்த இடம் என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கு நடுவில் நேற்று ( மே 5) விஜய் தன்னுடைய அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.