ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் 63வது படத்தை இயக்குகிறார். விளையாட்டு சம்பந்தமான கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
மேலும், அட்லி படங்களில் இரண்டு அல்லது மூன்று ஹீரோயினிகள் நடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த படத்தில் நயன்தாரா முதன்மை நாயகி என்றபோதும், கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா போன்ற நடிகைகளும் இணைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று விரைவில் தெரிந்து விடும்.
அப்படி இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைவது உறுதியாகி விட்டால், நயன்தாராவுக்கு எப்படி சிவகாசி, வில்லு படங்களுக்குப்பிறகு விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படமோ, அதேபோன்று கீர்த்தி சுரேஷ்க்கும் பைரவா, சர்காரைத் தொடர்ந்து இந்த படம் விஜய்யுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாகி விடும்.

