பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ் என மேலும் சில நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இவர்கள் தவிர, விஜய்யின் நீண்டகால நண்பர்களான ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இதையடுத்து டைரக்டர் லோகேஷூடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ள அவர்கள், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜிற்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

