தெலுங்கு நடிகரான அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக தமிழில் நேரடியாக அறிமுகமாகி உள்ள படம் நோட்டா. அரசியல் கதையில் உருவாகி உள்ள இப்படத்தை இருமுகன் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார்.
கதாநாயகியாக மெஹ்ரீன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கியமான ரோலில் சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் டீஸர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படம் அக்., 5-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

