அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற தெலுங்கு ஹிட் படங்களில் நடித்தவர் விஜய் தேவர கொண்டா. நோட்டா படம் மூலம் தமிழுக்கு நேரடியாக களமிறங்குகிறார். அக்டோபர் 5-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு இரண்டு மொழியில் இப்படத்திற்கான புரொமோஷன் தீவிரமடைந்துள்ள விஜய் தேவரகொண்டா, நோட்டா குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது, நோட்டாவைப்பற்றி இன்னும் நிறைய மக்களுக்கு புரிதல் இல்லை. ஆனால் இந்தப்படம் அதை மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கும்.
இதன்காரணமாக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு செயல்படுவார்கள். நோட்டா மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும் படமாக இருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.