கிருஷ்ணரை மையமாக கொண்டு பல தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகின. முதன் முறையாக கிருஷ்ணா, ராதாவின் காதல் கதை, தொடராக ஒளிப்பாக இருக்கிறது. இருவருக்கும் இடையிலான காதல் கதை சுவாரஸ்யமானது. அதையே திரைக்கதையாக்கி தொடராக ஒளிபரப்புகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ராதா கிருஷ்ணா என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் கிருஷ்ணராக சுமந்த் முடால்கரும், ராதாவாக மல்லிகா சிங்கும் நடிக்கிறார்கள். ஸ்வஸ்திக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.