நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாராவுடன் நடித்த விஜய் சேதுபதி, தற்போது 96 என்ற படத்தில் த்ரிஷாவுடன் நடித்து வருகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கும் இந்த படம் 16, 36, 96 வயது காலகட்டத்து கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. அதனால் மூன்று விதமான கெட்டப்பில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் நடித்து வருகிறார்கள்.
த்ரிஷாவுடன் நடித்த அனுபவம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், த்ரிஷாவைப் பொறுத்தவரை நடிப்பை ரொம்பவே நேசிப்பவர். எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதை முழுமையாக உணர்ந்து நடிக்கிறார். அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன்.
அதிகப்படியான தொழில் பக்தி கொண்ட த்ரிஷா, ஒருநாள்கூட ஸ்பாட்டுக்கு தாமதமாக வரமாட்டார். முதல் ஆளாக வந்து மேக்கப்போட்டு விட்டு கேமரா முன் வந்து விடுவார். இப்படி தொழில் மீது அவர் வைத்துள்ள மரியாதை காரணமாகத்தான் அவர் 15 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் என்கிறார் விஜயசேதுபதி.