பேட்ட படத்தை அடுத்து சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, மாமனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இறைவி படத்திற்கு பிறகு மீண்டும் அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று(ஜன.,16) மாலை 6 மணிக்கு அவரது டுவிட்டரில் வெளியானது. படத்திற்கு சிந்துபாத் என பெயிரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

