பிரபுதேவா, ராஜசுந்தரம் சகோதரர்களின் இளைய சகோதரர் நாகேந்திர பிரசாத்.. இவரும் தனது அண்ணன்களைப்போல டான்ஸ் மாஸ்டராக மாறி, அப்படியே சினிமாவில் கதாநாயகனாக ‘தொட்டாச்சிணுங்கி’ என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால் கதாநாயகன் வேடம் கைகொடுக்காத நிலையில் 2004ல் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் அவரது நண்பராக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே அவருக்கு நல்ல அறிமுகம் பெற்று தந்தது. ஆனாலும் அதற்கு பிறகு நடிப்பில் தொய்வு ஏற்படவே, மீண்டும் நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நாகேந்திர பிரசாத்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் விஜய் நடித்து வரும் அவரது 64 ஆவது படத்தில் முக்கிய வேடத்தில் நாகேந்திர பிரசாத் நடிக்கிறார்.. விஜய் சினிமாவில் தனது 27 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறினர். நாகேந்திர பிரசாத்தும், “சினிமாவிலும் தனது வாழ்க்கையிலும் எப்போதுமே விஜய் எனக்கு ஆதரவான நபராக இருந்து வந்திருக்கிறார்.. அவருடன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

