தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக இருக்கும் ரம்யா சுப்ரமணியம், தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக, டில்லியில் நடக்கும் படபிடிப்பில் அவர் இணைந்திருக்கிறார்.
பிகில் படத்தை அடுத்தி மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். திரில்லர் படமாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், அழகம் பெருமாள், ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, சஞ்சீவ், ஸ்ரீ நாத், பிரேம், ப்ரிகிடா, கவுரி கிஷன், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தின் முதல் கட்ட படபிடிப்பு, வட சென்னை ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, அடுத்தகட்ட படபிடிப்பு டில்லியில் நடந்து வருகிறது. கிட்டதட்ட 40 நாட்களுக்கு அங்கே படபிடிப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டு, கிட்டதட்ட பத்து நாட்களை கடந்து விட்டனர். இந்நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியனும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்காக டில்லி சென்றுள்ளார்.

