அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மூன்றாவது படம் பிகில். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் 100 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியுள்ளது. மேலும், இந்த படம் வெளியான சில வாரங்களில் ரூ.300 கோடி வசூலானதாக விஜய் ரசிகர்கள் செய்தி வெளியிட்டனர். ஆனால் விஜய்யின் ஹேட்டர்ஸ் பிகில் படம் படுதோல்வியடைந்து விட்டதாகவும், இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் பிலிம்ஸ் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் இன்னொரு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், தற்போது பிகில் படம் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கல்பாத்தி அர்ச்சனா டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களில் உலக அளவில் பிகில் படம் அதிக சாதனை படைத்திருப்பதாக பதிவிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

