பிகில் படத்தை முடித்த விஜய், ஓய்வுக்காக லண்டன் பறந்தார். சென்னை விமான நிலையத்தில், ‘மாஸ்க்’ அணிந்து, அவர் செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. அவர், 10 நாட்கள் பயணமாகவே, லண்டன் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விஜயின் மனைவி சங்கீதாவும், மகன் சஞ்சய், மகள் சாஷா ஆகியோரும், தீபாவளியை ஒட்டி, லண்டன் செல்ல இருப்பதால், அங்கேயே, தீபாவளியை கொண்டாட இருக்கின்றனர் என, தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படம், உலகம் முழுதும் வெளியாக இருப்பதால், விஜய், குடும்பத்துடன் அங்கேயே படத்தை பார்க்க இருக்கிறார். விஜய் மனைவி, சங்கீதாவின் பெற்றோர், லண்டனில் வசிக்கின்றனர்.

