தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவின் தங்கை கணவரும் ஒருவர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு சென்ற விஜய், சில்வாவின் தங்கை வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
இதையடுத்து தனது இணைய பக்கத்தில், எங்களின் வீட்டிற்கு சென்று எங்களது துக்கத்தை தனது துக்கமாக நினைத்து எனது தங்கைக்கு மனதார ஆறுதல் சொன்ன அண்ணன் விஜய்க்கு மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார் சில்வா.