தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் விஜயசாந்தி. குறிப்பாக, ஆக்சன் காட்சிகளில் ஆண்களுக்கு இணையாக நடித்து சாதித்து காட்டியவர் விஜயசாந்தி. பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த மன்னன் படத்தில் அதிரடி நாயகியாக நடித்தவர்.
இந்த நிலையில், தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்டு வரும் நயன்தாராவும், மன்னன் படத்தில் விஜயசாந்தி நடித்தது போன்று ஒரு வேடத்தில் நடிக்கப்போகிறாராம். அவருக்கு இந்த வேடம் ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கிடைத்துள்ளதாம்.
மேலும், இப்படம் காமெடி கதையில் உருவானபோதும், நயன்தாராவின் கேரக்டர் வேகமும், கோபமும் நிறைந்த ஒரு அதிரடி கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.