அஜித் படங்கள் எப்போது வெளியானாலும் திருவிழா தான். தமிழ்நாட்டை தாண்டி அவரது படங்கள் ஆந்திரா, கேரளா என எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெறும்.
இறுதியாக அவர் நடிப்பில் வெளியான விவேகம் படம் அவ்வளவாக லாபம் கொடுக்கவில்லை என்று பரவலாக தகவல்கள் வருகின்றன. இந்த நேரத்தில் அஜித் தன்னுடைய அடுத்த படத்தையும் சிவாவுடன் தான் என்றும் படத்தின் பெயர் விசுவாசம் என்றும் அறிவித்துவிட்டார்.
படக்குழுவும் நடிகர்களின் தேர்வுக்கு பின் படப்பிடிப்புக்கு போகலாம் என்று இருந்தால் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக். எப்போது படப்பிடிப்பு தொடங்கும் தீபாவளிக்கு வெளியாகுமா என்ற கேள்வி நிறைய ரசிகர்களிடம் உள்ளது.
தற்போது என்னவென்றால் அஜித் விசுவாசம் படத்தில் நடிகர் போஸ் வெங்கட் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.