மேயாதமான், பிகில் என பல படங்களில் நடித்தவர் இந்துஜா. கைவசம் பல படங்களை வைத்திருக்கும் இவர், கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் மாறுபட்ட வேடங்களிலும் நடித்து வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், டிசம்பர் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாளன்று சென்னையிலுள்ள காசி தியேட்டரில் பாட்ஷா படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்துள்ளார். அப்போது தனது தோழிகளுடன் சென்று படம் பார்த்த இந்துஜா, ரஜினி திரையில் தோன்றிய காட்சிகளின்போது எழுந்து நின்று விசில் அடித்து ரகளை செய்திருக்கிறார்.
ஆனால் தன்னை யாரேனும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக துணியால் முகத்தை அவர் மூடிக்கொண்டபோதும், ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு அவருடன் சேர்ந்து கொண்டு தங்களது உற்சாகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

