வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து இன்று (செப்டம்பர் 5) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
குண்டர் சட்டத்தின் குரல்வளை நெறித்து..தங்கை வளர்மதி தரணி போற்ற வருகிறாள்.
குண்டர் சட்டத்தின் குரல்வளை நெறித்து..தங்கை வளர்மதி தரணி போற்ற வருகிறாள்.. #Valarmathi pic.twitter.com/0TPHfXsPDM
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.