சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாக நடித்து பரபரப்பான நடிகையாகி விட்டார் வரலட்சுமி. தற்போது அரை டஜன் படங்களில் நடிக்கும் அவர், தனுஷின் மாரி-2 படத்தில் விஜயா என்றொரு அரசு அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ள படம் வெல்வெட் நகரம். அவர் பத்திரிகையாளராக நடித்துள்ள இந்த படத்தை மனோஜ்குமார் நடராஜன் இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் ரமேஷ்திலக், கஸ்தூரி, மாளவிகா சுந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் இதை டுவிட்டரில் வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் இந்த டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளது.