Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘வட சென்னை’ – ‘பொல்லாதவன், புதுப்பேட்டை’ ஞாபகம் வருகிறதா ?

July 30, 2018
in Cinema
0
‘வட சென்னை’ – ‘பொல்லாதவன், புதுப்பேட்டை’ ஞாபகம் வருகிறதா ?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டீசருக்கு வழக்கம் போல் தனுஷ் ரசிகர்களிடமும், வெற்றிமாறன் ரசிகர்களிடமும் எதிர்பார்த்த வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், டீசரைப் பார்க்கும் போது, ‘பொல்லாதவன், புதுப்பேட்டை’ இரண்டு படங்களின் சாயல் வருவதை மறுப்பதற்கில்லை.

தனுஷ் இதுவரை நடித்துள்ள படங்களிலேயே ‘பொல்லாதவன், புதுப்பேட்டை’ படங்கள் அவருடைய நடிப்பில் தனி கவனம் பெற்ற படங்கள். இரண்டு படங்களிலும் அவர் சென்னைத் தமிழ் பேசும் இளைஞராக நடித்திருந்தார். ‘வடசென்னை’ படத்தில் அவர் வசனம் பேசும் ஸ்டைலும் அப்படியேதான் இருக்கிறது. மேலும், டீசரில் உள்ள சில தோற்றத்தைப் பார்க்கும் போது ‘அனேகன்’ படத்தின் சாயலும் வந்து போகிறது.

ஏற்கெனவே, வட சென்னையை மையமாக வைத்து பல கேங்ஸ்டர் படங்களைப் பார்த்து சலித்துப் போய்விட்டது. மதுரையை மறந்து தமிழ் இயக்குனர்கள் வடசென்னை பக்கம் வந்தார்கள்.

இருப்பினும், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இதற்கு முன் வந்த வட சென்னை மைய படங்களைக் காட்டிலும் இந்த ‘வடசென்னை’யை வித்தியாசமாகக் காட்டுவார்கள் என நம்புவோம்.

Previous Post

20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த மகேஷ்பாபு

Next Post

தமிழ்ப்படம் – 2 மீது வழக்கு

Next Post

தமிழ்ப்படம் - 2 மீது வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures