அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரி டரோ கனோ, ராணுவ மந்திரி இட்ஸ்னோரி ஒனோடெரா ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், ‘‘அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அதனை எதிர்கொள்ள வடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தயாராக உள்ளோம். இதற்கு எங்களது ராணுவம் தயாராக உள்ளது’’ என கூறினார்.
அதே போல் ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் குவாம் தீவு, ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் பிரதேசங்களை குறிவைத்து வடகொரியா ஏவுகணையை ஏவினால் உடனடியாக அதிரடி நடவடிக்கை மூலம் அதனை வீழ்த்துவோம்’’ என தெரிவித்தார்.

