நடிகர் மோகன்லால் தனது மலையாள மொழி தவிர்த்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து விட்டார். பாலிவுட்டிலும் தடம் பதித்துவிட்டார். இந்தநிலையில் அடுத்ததாக இவர் வங்காள மொழி படம் ஒன்று நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் ஆசிஷ் ராய் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளாராம். வங்காள மொழி எழுத்தாளர் அபுல் பஸார் என்பவர் எழுதி, அதிக அளவில் விற்பனையான நாவலான பு பௌ’ என்கிற நாவலை தழுவித்தான் இந்த படம் உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, ராதிகா ஆப்தேவிடம் பேசி வருகிறார்களாம்.

