Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

லா லிகா கால்பந்து தொடர்:பார்சிலோனா அணி சொதப்பல்

March 2, 2018
in Sports
0

ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கான லா லிகா தொடர் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற 3 லீக் போட்டிகளின் முதல் லீக் ஆட்டத்தில் ரியல் சோஷியேட் அணியும்,பெட்டிஸ் அணியும் மோதின.மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணியை கத்துக்குட்டி அணியான லாஸ்பல்மாஸ் அணி எதிர்கொண்டது.பலமான பார்சிலோனா அணியை,லாஸ்பல்மாஸ் அணி எந்த விதத்தில் சமாளிக்க போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலடித்து அசத்த ரசிகர்களின் கரகோஷத்தால் மைதானமே அதிர்ந்தது.48-வது நிமிடத்தில் லாஸ்பல்மாஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் முன்கள வீரர் கல்லேரி கோலாக மாற்ற ஆட்டம் சூடு பிடித்தது.

இதன் பிறகு இரு அணி வீரர்களுக்கும் கோலடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் கோலடிக்காமல் வீணாக்கினார்.இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்த ஆட்டத்தில் இருஅணி வீரர்களும் மைதானத்தில் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் பலமுறை மோதிக்கொண்டனர்.இதனால் வீரர்களை நடுவர் பலமுறை மஞ்சள் அட்டை மூலம் எச்சரிக்கை விடுத்தார்.லாஸ் பல்மாஸ் அணியில் 6 வீரர்களும்,பார்சிலோனா அணி தரப்பில் 3 வீரர்களும் மஞ்சள் அட்டையை பெற்றனர்.இறுதியாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அலாவேஸ் அணியும்,லெவாண்டே அணியும் மோதின.இந்த ஆட்டத்தில் அலாவேஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் லெவாண்டே அணியை எளிதாக வென்றது.

Previous Post

இந்திய அணிக்கு கோலியின் ஆக்ரோ‌ஷமும்,தோனியின் அமைதியும் தேவை

Next Post

முத்தரப்பு டி-20 தொடர் இலங்கை அணி அறிவிப்பு

Next Post

முத்தரப்பு டி-20 தொடர் இலங்கை அணி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures