சென்னை ராயபுரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் 5 ரூபாய் கட்டணத்தில் வைத்தியம் செய்து புகழ்பெற்றது டாக்டர் எஸ்.ஜெயச்சந்தரன். கடந்த ஆண்டு இவர் காலமானார். இவரது நினைவாக அவரது உறவினர்கள் ஆண்டுதோறும் மக்கள் சேவையாற்றுகிறவர்களுக்கு அவரின் பெயரில் விருது வழங்க முடிவு செய்தார்கள். இதற்காக தாயன்பு என்ற அறக்கட்டளையையும் தொடங்கினார்கள்.
அதன்படி டாக்டர் ஜெயச்சந்திரனின் முதலாமாண்டு நினைவு தினமும், விருது வழங்கும் விழாவும் நடந்தது. இதில் நடிகர் ராகவா லாரன்சுக்கு அவர் ஆற்றி வரும் சமூக பணிகளை பாராட்டி 5 ரூபாய் டாக்டர் விருது வழங்கப்பட்டது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார்.
“மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறது” என்கிறார் லாரன்ஸ்.

