தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் நேற்று வெளிவந்தது. அப்படத்தை தனுஷ் அவர் நடித்து வரும் 40வது படக்குழுவினருடன் லண்டனில் பார்த்தார். அவருடன் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நாயகி ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் உடன் சென்றனர்.
படம் பார்த்துவிட்டு, தனுஷுடன் இருக்கும் புகைப்படத்துடன் படம் பற்றி தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார் தனுஷின் 40வது படக் கதாநாயகி ஐஸ்வர்ய லட்சுமி.
“இப்போதுதான் அவருடைய ஒரு முக்கிய தீவிரமான நடிப்பைப் பார்த்து அவரது சிரிப்பையும் பார்த்தேன். சமத்துப் பையன் சிரிக்கிறார். புயலுக்கு முந்தைய அமைதி. தனுஷ் சார், உடன் நடிக்கும் நடிகரின் பெருமை. எங்கள் மொத்த குழுவும் அவருடைய நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போய் உள்ளோம். மஞ்சு வாரியர், பச்சையம்மா….உண்மையிலேயே மிகவும் பிரமாதமான நடிப்பு…,” என்று பாராட்டியுள்ளார்.

