நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல தரமான படங்களாக நடித்து வருபவர். பல விருதுகளைப் பெற்ற இவர் தற்போது மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஏற்கெனவே தமிழ், தெலுங்கில் நடித்து பிரபலமாக இருந்துவரும் இவர் மலையாள சினிமாவில் ‘ரோசாப்பூ’ என்ற படத்தில் நடித்துள்ளார். வினு ஜோசப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார்.
பிஜு மேனன், நீரஜ் மாதவ், அஞ்சலி, சௌபின் ஷாகிர், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
டீசரில் வெளியாகியிருக்கும் காட்சிகளின் மூலம் ‘ரோசாப்பூ’ படத்தில் அஞ்சலி பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார் எனத் தெரிகிறது. தற்போது இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.