‛தர்பார்’ படத்தை முடித்துவிட்ட ரஜினி, அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்னர் திடீர் பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார்.
ரிஷிகேசில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் ரஜினி.
இன்று காலை அங்குள்ள ரசிகர்களுடன் ரஜினி எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

