தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கி வந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா, திடீரென மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜி தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிராமா ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா. ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி எனும் ஊரை சேர்ந்த கோகுல் சாய் கிருஷ்ணா, தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை போல நடித்து காட்டி அசத்தி வந்தான்.
இந்நிலையில் கோகுல் சாய் டெங்குவால் பாதிக்கப்பட்டு சித்தூரில் சிகிச்சை பெற்று வந்தான். உடல்நலை மோசமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவனை பெங்களூரு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே கோகுல் இறந்துவிட்டான்.
இந்த செய்தி தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்திலும், திரைத்துறையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோகுலின் இறப்புக்கு நந்தமுரி பாலகிருஷ்ணா இரங்கல் தெரித்துள்ளார்.

