மகேஷ்பாபுவுடன் ராஷ்மிகா நடித்து வரும் படம் சாரிலேரு நீகேவரு. நீண்ட இடைவேளைக்குப்பிறகு விஜயசாந்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ஜனவரி மாதம் வரும் சங்கராந்திக்கு வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் வெளியான நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.
இந்த டீசரை ஒரே நாளில் 8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் சாரிலேரு நீகேவரு படத்தின் டீசர் தெலுங்கு சினிமாவில் ரெக்கார்டு செய்துள்ளது. ஆனால் அந்த டீசரில் படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனாவை காணவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையடுத்து அப்படத்தை இயக்கும் அனில்ரவிபுடி, அடுத்தபடியாக வெளியாகும் பிரமோசன்களில் ராஷ்மிகா சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

