யு-டியூபில் ஹிந்திப் படப் பாடல்கள், டீசர்கள், டிரைலர்கள் படைக்கும் சாதனை தனி ரகம். அந்த சாதனையை சமீப காலங்களில் தமிழ்ப் படங்கள்தான் நெருங்கி வருகின்றன.
ஆனால், முதல் முறையாக ஒரு தெலுங்குப் படப் பாடல் தமிழ்ப் படப் பாடல்களின் சாதனையை முறியடித்துள்ளது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘அல வைகுந்தபுரம்லு’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராமுலு ராமுலோ’ பாடல் 24 மணி நேரத்தில் 83 லட்சம் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது.
ஆனால், லைக்குகள் விதத்தில் ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் 18 மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகள் பெற்ற சாதனையை முறியடிக்க முடியவில்லை.

