மிகுந்த பொருட் செலவில் தயாராகும் ஹிந்தி படம் பிரம்மாஸ்திரா. அமிதாபச்சனோடு, அலியா பட், ரன்வீர் கபூர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அயன் முகர்ஜி இயக்குகிறார். கரண் ஜோகர், யாஷ் ஜோகர், ரன்வீர் கபூர், அயன் முகர்ஜி, பாக் ஸ்டார் ஸ்டூடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்கோத்ரா உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படம் பல பாகங்களாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் இந்தப் படம் அடுத்த மே மாதம் ரிலீசாகும் என தெரிகிறது. இதற்கான படபிடிப்பு, தற்போது இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மணாலியில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ரன்வீர் கபூர் மற்றும் அலியா பட் ஆகியோர் இணைந்து ஆடும் பிரம்மாண்டமான நடன காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்த நடன காட்சிகளை, தமிழகத்தின் பிரபல நடன கலைஞர் பிருந்தா அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

