தமிழில், 8 தோட்டாக்கள், ஜீவி படங்களில் நடித்த வெற்றி, தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”இரு படங்களிலும், நான் ஒரே மாதிரி, அமைதியான சுபாவமாக நடித்ததாக, சிலர் விமர்சிக்கின்றனர். கதையின் தேவைக்கேற்ப நடித்தேன்.
பிப்ரவரியில் வெளியாகும், கேர் ஆப் காதல் படத்தில், என் வித்தியாசமான நடிப்பைப் பார்ப்பீர்கள். 8 தோட்டாக்கள் படத்தைப் பார்த்த ரஜினி, என்னை அழைத்து பாராட்டினார்,” என்றார்.

