கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் 165 படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திரங்களின் அணிவகுப்பால் களைகட்டி வருகிறது. இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றுள்ளது. தற்போது சென்னையில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்..
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் விஜய்சேதுபதி. இதுநாள்வரை அடர்ந்த தாடியுடன் வலம் வந்த விஜய்சேதுபதி இந்தப்படத்திற்காக தாடி மீசையை ட்ரிம் பண்ணி, ஹேர்ஸ்டைலையும் மாற்றி புது லுக்கிற்கு மாறியுள்ளார்..
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வேலை நிமித்தமாக வந்துசெல்லும் ரசிகர் ஒருவர் விஜய்சேதுபதியுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் வெளியிட அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
