கபாலி, காலா படங்களில் முதிர்ச்சியான கெட்டப்பில் நடித்த ரஜினியை, பேட்ட படத்தில் இளமையான கெட்டப்புக்கு மாற்றினார் கார்த்திக் சுப்பராஜ். அதிலும் பிளாஷ்பேக் காட்சிகளில் முறுக்கு மீசை கெட்டப்பில் ரஜினி தோன்றியதை அவரது ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.
இந்நிலையில் பேட்டயை தொடர்ந்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளார் கார்த்திக் சுப்பராஜ். சுருளி என பெயரிடப்பட இருக்கும் இப்படத்தின் கிளைமாக்சில் தனுஷை, பேட்ட ரஜினியைப் போன்றே முறுக்கு மீசை கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த கெட்டப்பில் தனுஷ் தோன்றும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

