திருச்சியில் நகை கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா மீடியாக்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டு நான் நடித்து மொத்தம் 7 படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்தபடியாகவும் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவில் எந்த நடிகைகளையும் நான் போட்டியாக நினைப்பதில்லை. எனக்கு வரும் நல்ல கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிப்பதில் மட்டுமே கவனம் உள்ளது. எனக்கு அதிர்ஷ்டம் உள்ளது. அதனால்தான் 13 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன்.
ரஜினி, கமலின் ரசிகையாக அவர்களை நேசிக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இணைய பக்கத்தில வெளியிட்டேன். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்வதை வரவேற்கிறேன். அவர்களுடன் இணைந்து நடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ள தமன்னா, இளவட்ட நடிகர்களில் தனுஷ், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

