முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் வெளியீடாக ஒருவாரம் முன்னதாக ஜன.,9ம் தேதி வெளியாகிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பொங்கல் விடுமுறையை குறிவைத்து சில படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் பிரபு தேவா நடித்துள்ள பொன்மாணிக்க வேல் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட போவதாக அறிவித்துள்ளனர்.
ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நிவேதே பெத்துராஜ் நடித்துள்ளார். இவர்கள் தவிர சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

