நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் மக்களிடம் அரசியல் எழுச்சி வந்ததும், தான் அரசியலுக்கு வருகிறேன் என பேசினார். இதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், இன்னொரு தரப்பில் எதிர்ப்பு இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் ராகவா லாரன்ஸ், ரஜினியின் கருத்து குறித்து லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில், சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை என்ற பெயரில் பதிவிட்டிருக்கிறார்.

