விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. விஜய் சேதுபதி பேசியதாவது: 96-ல் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் கதை. 96 ஓர் இரவில் படம் நகரும்.
த்ரிஷாவுடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. த்ரிஷா, நயன்தாரா, தமன்னா மூவரும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களை பார்த்து பாடம் கற்றேன். மணிரத்னம் படத்தில் நடித்தது காற்றாற்று வெள்ளத்தில் பயணித்தது போன்று இருந்தது. அவ்வளவு வேகமாக யோசிக்கிறார். அவரை பார்த்து பிரமித்தேன்.
ரஜினி படத்தில் வில்லனாக நடித்தது வருத்தம் இல்லை. அவருடன் நடித்ததே மகிழ்ச்சி. நேற்று தான் சினிமாவிற்கு வந்தது போன்றும், இந்தப்படம் வெளியானால் தான் தனக்கு அடுத்து வாழ்க்கை இருப்பது போன்றும் வேலை பார்க்கிறார். செட்டில் அவருடன் பேசும்போது பயம் இருக்கும். அவரிடம் பேசினால் நம்மையும் மீறி அவரைப் போன்ற ஸ்டைல் நமக்கும் வந்து விடுகிறது. அதனால் அவரிடம் பேசுவதை குறைத்தேன் என்றார்.