கபாலி, காலா என ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிவிட்ட ரஜினி, தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. இதையடுத்து ரஜினிக்கு ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன் ஆகியோர் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. சில இளம் இயக்குநர்களும் ரஜினியிடம் கதை சொல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை இயக்கிய சாய்ரமணியும், டார்ஜிலிங் படப்பிடிப்புக்கு ரஜினி செல்வதற்கு முன்பு அவரை சந்தித்து, பாட்ஷா பாணியில் ஒரு அதிரடியான ஆக்சன் கதையை சொன்னாராம்.
அந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னாராம் ரஜினி. அதேசமயம், இனிமேல் இந்த மாதிரியான கதைகளில் நான் நடிப்பது சரியாக இருக்காது என்று சொல்லி நிராகரித்து விட்டாராம்.
