ஈ.வே.ரா. பற்றி தான் சொன்ன கருத்திற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினிகாந்த் நேற்று கொடுத்த பேட்டி தான் அரசியல் உலகில் பரபரப்பாக இருந்தது. ரஜினியுடன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு, ரஜிகாந்த் பேட்டிக்கும் நிலைப்பாட்டுக்கும் ஆதரவு கொடுத்து டுவீட் போட்டிருந்தார். அதற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்தது.
ரஜினியுடன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்பதால் இப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கிறதா என பலர் அவரிடம் கேட்டிருந்தனர். அவருடன் நான் ஏற்கெனவே சில ஹிட் படங்களில் நடித்துவிட்டேன். அதற்காக எல்லாம் அப்படி பேச மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.
திரையுலகில் உள்ள பலரும் ரஜினியின் பேட்டிக்கு ஆதரவாக கருத்துக்களைப் பதிவிட்டனர். மற்றவர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்து கருத்துக்களைப் பதிவிட்ட நிலையில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்புவின் ரஜினி ஆதரவு நிலைப்பாட்டிற்கு அவரது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

