காலா மற்றும் 2.0 படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் ரஜினி. தமிழகத்தில், அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் வரை, தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மேலும், தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்புகளுக்கு சென்று வரும் ரஜினி, தன் பாதுகாப்பு கருதி, இப்போது, பலத்த செக்யூரிட்டியுடன் சென்று வருகிறார்.