ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி! வீடியோ இணைப்புபெங்குளுர் அணியை 5 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் அணி 20 ஓவர்களில் 8 விட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
34 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்ற அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவானார்.
சென்னை அணிக்கு எதிரான இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி தலைவர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி 4 ஓட்டம் ஒன்றை தடுத்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேவேளை, இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
4வது இடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் 5வது இடத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் காணப்படுகின்றன.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர், மும்பை இன்டியன்ஸ் மற்றும் டெல்கி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகள் முறையே 6ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் இடங்களில் உள்ளன.
இதனிடையே, இன்று இடம்பெறள்ள போட்டியில் கிங்ஸ் இளவன் பஞ்சாப் அணியும் சன்ரைசஸ் ஹதராபாத் அணியும் பங்குகொள்ளவுள்ளன.