ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. ராதா மோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விதார்த்இ லட்சுமி மஞ்சுஇ எம்.எஸ்.பாஸ்கர்இ இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யாபாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எச்.ஆசிப் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.
தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்குப் பிறகு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யோகி பாபு இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கதைப்படி ஆர்.ஜே.வான ஜோதிகாவிடம் போன் பண்ணி தன் காதல் கதையைச் சொல்கிறார் யோகி பாபு. அவருடைய காதலை ஜோதிகா எப்படிச் சேர்த்து வைக்கிறார் என இரண்டு காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.