ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடித்த ‛கோமாளி’ படம் 50 நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இதன் வெற்றி விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயம் ரவி பேசியதாவது:
நல்ல படம் கொடுத்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த வெற்றி நிறைவை தந்திருக்கிறது. ‛தனி ஒருவனில் வராத டயலாக் ஒன்று இருந்தது. “நேர்மையாய் இருப்பது என்பது நமது கடமை அது சாதனை ஆகாது. நாம் நல்லவனாக இருக்க வேண்டியது கடமை”. நான் மகிழ்ச்சியாக வேலை செய்வதால் தான் வெற்றி தேடி வருகிறது. செய்யும் வேலையை மகிழ்ச்சி உடன் செய்தால் போதும்.
நான் நிறைய புதிதாக முயற்சிக்கிறேன். அதை ஆதரவு தந்து ரசிப்பது ரசிகர்கள் தான். அவர்களால் தான் வித்தியாசமான படம் செய்கிறேன். இந்தப்படத்தில் யோகிபாபு தான் வேண்டுமென்று நான் தான் சொன்னேன். அவர் எனது மிகச்சிறந்த நண்பராகிவிட்டார். அவரை வைத்து நான் படம் இயக்க வேண்டுமென்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

